Home உலகம் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : பிரபலமான உகண்டா சிறுவர்கள் : வைரலாகும் காணொளி

ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : பிரபலமான உகண்டா சிறுவர்கள் : வைரலாகும் காணொளி

0

  அமெரிக்க பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(donald trump) மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு உகண்டா சிறுவர்கள் மறு வடிவம் கொடுத்துள்ளனர்.

ரிக்ரொக் வலைத்தளத்தில் இந்த சிறுவர்களின் காணொளி வைரலாகியுள்ளது.

சிறுவர்களின் செயற்பாடு 

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது இந்த சிறுவர்களின் செயற்பாடு மூலம் வெளிவந்துள்ளது.

மரத்தாலான துப்பாக்கிகள்,பிளாஸ்ரிக் பெட்டிகளால் செய்யப்பட்ட மேடையை வைத்து இந்த சிறுவர்கள் அந்த காணொளியை உருவாக்கியுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற பின்னர் ட்ரம்ப் எப்படி போராடு என்று கத்தினாரோ அதையே ட்ரம்ப் போல பாவனை செய்த சிறுவனும் கத்துகின்றமை இதில் விசேட அம்சமாகும்.  

Source: https://ibctamil.com/article/recreate-attempted-trump-assassination-1721297271

NO COMMENTS

Exit mobile version