Home இலங்கை சமூகம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு : பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

0

அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் ஆணைக்குழுக்களில் நிலவும் வெற்றிடங்களுக்காக புதிதாக ஆட்சேர்ப்பதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) யோசனை சமர்ப்பித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் சமர்ப்பித்த யோசனை 

அரச சேவையின் ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் கால வரையறையை இனங்கண்டு அது சார்ந்த அத்தியாவசியமாக மேற்கொள்ள வேண்டிய ஆட்சேர்ப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழு செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு அமைச்சும் தமது அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் நியமனம் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காக மேற்குறித்த குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 2025-11-14 ஆம் திகதி நடைபெற்ற மேற்குறித்த அதிகாரிகள் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய பின்வரும் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்காக பிரதமர் யோசனை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version