Home இலங்கை சமூகம் மின்சார சபை விடுத்துள்ள சிவப்பு அறிவிப்பு

மின்சார சபை விடுத்துள்ள சிவப்பு அறிவிப்பு

0

இரத்தினபுரி மாநகர சபை உட்பட இரத்தினபுரி மாவட்டத்தில் மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய இலட்சக்கணக்கான ரூபாவை செலுத்தாத உள்ளூர் அதிகாரிகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாநகர சபைக்கு வீதி விளக்குகளுக்காக மாதாந்தம் 38 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணமாகப் பெறப்படுவதாகவும், நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான மின்சாரக் கட்டணத்துடன் அறிவிப்பும் இருப்பதாக மாநகர சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை துண்டிக்க  நடவடிக்கை

மேலும், பலாங்கொடை,  எம்பிலிபிட்டிய மாநகர சபைகள் மற்றும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் இப்பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் இந்தப் பணத்தை செலுத்த முடியாத நிலையில் வீதி விளக்குகளில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு விதுளிய மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version