Home இலங்கை அரசியல் இருமுறை சிந்திக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத்திற்கு அவசர கடிதம்

இருமுறை சிந்திக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத்திற்கு அவசர கடிதம்

0

பனை அபிவிருத்திச்சபையின் புதிய தலைவராக ரேனியஸ் செல்வின் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தொடர்பில் இருமுறை சிந்திக்குமாறு  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு பனை அபிவிருத்தி சபையின் ஒன்றிணைந்த ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ரேனியஸ் செல்வின் பல ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவரின் நியமனம் குறித்து சிந்திக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நான்கு குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தல்

இந்நிலையில், அவர் மீதான கணக்காய்வு விசாரணைகளில் நான்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

இவர் நிர்வாக இயக்குநராக இருந்த 2015-2019 காலகட்டத்தில் இயந்திரம் வாங்கியதில் இரண்டு கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஊழியர் சங்கம் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிதி முறைகேடுகளை செய்த ஒருவரை பதவியில் அமர்த்துவதற்கு முன்னர் இருமுறை யோசிக்குமாறும் அமைச்சரிடம் அந்த சங்கம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

NO COMMENTS

Exit mobile version