நாட்டில் குடும்பம் ஒன்றிற்கான மாதாந்தச் செலவு குறைவடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளி விபரவியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள இதனைத் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் குறித்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்துள்ள செலவு
இதன்படி, ஒரு குடும்பத்தின் மாதாந்தச் செலவில் 6,037 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் உணவு வகைகளுக்கான மாதாந்த செலவும் 2,885 ரூபாவினால் குறைவடைந்துள்ளது.
நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க உணவு அல்லாத பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் குறைவடைந்ததன் காரணமாக பொதுமக்களுக்கு 3,145 ரூபா மீதமாகியுள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள மேலும் குறிப்பிட்டுள்ளார்.