கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தமான பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.
இந்த ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் தற்பொழுது இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட மாம்பழங்களின் விளைச்சல் கலைக்கட்டியுள்ளது
கிட்டத்தட்ட 1000 கிலோ கிராம் டொம் ஜெசி (Tom JC) வகை மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மரங்கள் அனைத்தும் எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை உரங்கள் மூலம் பராமரிக்கப் படுவதால் மாம்பழங்கள் இயற்கையான சுவையுடன் காணப்படுகின்றன.
மேலும், அவைகளின் நிறையும் 600 கிராம்களுக்கு குறையாமல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் தெரிந்துகொள்ள கீழுள்ள காணொளியை பார்வையிடவும்,
Source: https://ibctamil.com/article/reecha-1000-kg-mango-harvest-1726756007
