தக் லைஃப்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஜூன் 5 – ம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இப்படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா.. இத்தனை கோடியா?
இத்தனை கோடியா?
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா பெற்ற சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, தக் லைஃப் படத்தில் நாயகியாக நடித்துள்ள திரிஷா ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். இவர் இப்படத்தில் இந்திராணி என்ற பாடகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
