தமிழர்களின் உணவு மரபு எப்போதும் தனித்துவம் வாய்ந்ததாகவே விளங்குகிறது.
“உணவே மருந்து – மருந்தே உணவு” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, அறுசுவை உணவுகளை உண்ணும் பழக்கம் தமிழர் பாரம்பரியத்தின் முக்கிய அம்சமாகும்.
இந்த நிலையில், வடக்கு – கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்கள், சுவையிலும் ஆரோக்கியத்திலும் வித்தியாசம் கொண்டவையாகும்.
அதனை உலகிற்கு காட்டும் வகையில் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குள் றீ(ச்)ஷா ஏற்பாடு செய்த உணவுத் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக சிறப்பாக இடம்பெற்றது.
இன்று அந்த விழா இறுதி நாளை எட்டியுள்ள நிலையில், மக்கள் பெருந்திரளும், சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு பாரம்பரிய உணவுகளை ருசித்து, விழாவின் நிறைவினை கொண்டாடி வருகின்றனர்….
https://www.youtube.com/embed/ZGPKgkMdqQc
