Home இலங்கை சமூகம் இன்றும் ஆரம்பமான றீ(ச்)ஷாவின் மாபெரும் உணவு திருவிழா

இன்றும் ஆரம்பமான றீ(ச்)ஷாவின் மாபெரும் உணவு திருவிழா

0

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா இன்றும்(06.09.2025) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இந்த உணவுத் திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த மாபெரும் உணவு திருவிழா நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டது.

அத்துடன், நாளையதினம் வரை இந்த உணவுத் திருவிழா, சிறப்பாக நடைபெறவுள்ளது.

பொழுதுபோக்கு அம்சங்கள்

குறித்த தினங்களில் மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவில், இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறவுள்ளன.

இந்த உணவு திருவிழாவில் பங்கேற்கும் 5 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1000 ரூபாவும் 5 வயது தொடக்கம் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 2000 ரூபாவும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 3000 ரூபாவும் நுழைவு கட்டணம் அறவிடப்படும்.

NO COMMENTS

Exit mobile version