Home முக்கியச் செய்திகள் சர்வதேச விருது பட்டியல் : றீச்சா நிறுவனத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

சர்வதேச விருது பட்டியல் : றீச்சா நிறுவனத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

0

வடக்கு மாகாணத்தில் (northern province) மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சியை கண்டு உலகத்தமிழர்களின் பேராதரவை பெற்றுவரும் றீச்சா (reecha) ஓர்கானிக் ஃபார்ம் (பிரைவேட்) நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையில் நடைபெறும் மதிப்புமிக்க வணிக சர்வதேச விருதுகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குளோபல் கிளாசிக் (பிரைவேட்) லிமிடெட் உதவி மேலாளர் அஜிதா அனந்தன், றீச்சா நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச விருதுகளுக்கான பட்டியல்

சர்வதேச விருதுகளுக்கான பட்டியலில் றீச்சா ஓர்கானிக் ஃபார்ம் (பிரைவேட்) நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளமையானது வணிக சமூகத்திற்கு உங்கள் சிறந்த சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

நீங்கள் இருக்கும் குறிப்பிட்ட துறைக்கான உங்கள் புதுமையான பணி மற்றும் அர்ப்பணிப்பால் எங்கள் தேர்வுக் குழு மிகவும் ஈர்க்கப்பட்டதுடன் இந்த விருதுக்கு பட்டியலிடப்பட்டது உங்கள் கடின உழைப்பு, தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

மேலும் இது தொடர்பான மேலதிக விவரங்களைப் பற்றி கலந்துரையாட உங்களுடன் ஒரு சந்திப்பைப் நடத்த விரும்புகிறோம். இந்த தகுதியான அங்கீகாரத்திற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். உங்களுடன் சந்திப்பை நடத்த நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், மேலும் இறுதித் தேர்வில் வெற்றியடைய உங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சி

வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பில் மிகவும் குறுகிய காலத்தில் பெரு வளர்ச்சியை கண்ட றீச்சா நிறுவனம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலித்து மகிழும் ஒரு இடம் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.

சுற்றுலா தலம் மட்டுமல்லாது விவசாயம்,கால்நடை வளர்ப்பு, என இன்னோரன்ன பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் இந்த நிறுவனம் பல நூறுபேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version