ஜெர்மனியில் (Germany) உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைத்து புறாக்களையும் கொல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நகரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி நகரவாசிகளின் ஒப்புதலை பெற்ற பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
‘லிம்பர்க் ‘ (Limburg)என்று அழைக்கப்படும் இந்த சிறிய நகரத்தில் பல்லாயிரக்கணக்கான புறாக்கள் வாழ்கின்றன, அவை நகரவாசிகளுக்கு தலைவலியாக மாறியுள்ளன.
நகர மக்கள் கோரிக்கை
அத்துடன், புறாக்களால் பல ஆண்டுகளாக மாசுபட்டுள்ள வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களை சுத்தம் செய்வது நகராட்சி அதிகாரிகளுக்கே தலைவலியாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், புறாக்களை கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகளிடம், நகர மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்ப்பு
இதனை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் 20ம் திகதி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புறாக்களை கொல்வதற்கு நகரவாசிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி புறாக்களை கொல்ல நகர அதிகாரிகள் தயாராகி வரும் நிலையில், விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
மேலும், கருத்துக் கணிப்புகளின்படி, இந்த நடவடிக்கை முன்னெடுப்பதில் தடைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.