நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மக்கள் வாக்கெடுப்பு இயக்கத்தின் சின்னத்திற்கான வடிவமைப்பு போட்டியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் முதலாம் இடம்பெறுபவர்களுக்கு 1000 அமெரிக்க டொலர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி விபரங்கள்
குறித்த சின்னம், எவ்வாறு அமைய வேண்டும் மற்றும் போட்டிக்கான விதிமுறைகள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டுபிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய போட்டியாளர்கள், தங்களது வடிவமைக்கப்பட்ட சின்னங்களை pmo@tgte.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
