Home இலங்கை மியன்மாரின் மோசடி மையத்தில் சிக்கிய இலங்கையர் விடுவிப்பு!

மியன்மாரின் மோசடி மையத்தில் சிக்கிய இலங்கையர் விடுவிப்பு!

0

மியன்மாரின் மோசடி மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது தாய்லாந்து இராணுவத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணைகள்

மியன்மாரின் கரேன் மாநிலத்தில் உள்ள தொலைத்தொடர்பு மோசடி மையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதக் குழுவால் விடுவிக்கப்பட்டவர்கள் தாய்லாந்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுள் பலர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அவர்கள் மனித கடத்தலுக்கு உள்ளானவர்களா? என்பதைக் கண்டறியும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version