Home இலங்கை சமூகம் யாழ். மாவட்ட செயலருக்கும் முதலீட்டாளர்களுக்குமிடையே கலந்துரையாடல்!

யாழ். மாவட்ட செயலருக்கும் முதலீட்டாளர்களுக்குமிடையே கலந்துரையாடல்!

0

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் நடத்தப்படும் முதலீட்டாளர்களுடனான
கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்
பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் இன்றைய தினம் (13.02.2025) காலை 09.00 மணிக்கு
மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய ஒற்றுமை மற்றும்
ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் தலைவர் விஜித் ரொஹான் பொ்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசாங்க அதிபர்

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ்ப்பாண
மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கிய பயணத்தில் தொழில் முயற்சியாளர்கள்
இடர்பாடுகளை கலந்துரையாடி தீர்க்கவும், ஆக்க பூர்வமான கருத்துக்களை பகிர்வதுமே
இக் கூட்டத்தின் நோக்கம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சனைகளை தீர்த்து ஒழுங்குபடுத்துவதே அரச பணியாளர்களின் நோக்கமாகவிருக்க
வேண்டும் எனவும், ஒர் கூரையின் கீழ் தீர்க்கவல்ல வகையில் அமைய வேண்டும் எனக்
குறிப்பிட்டு, அதற்கான கருத்துக்களையும் முன்வைக்குமாறும் கேட்டுக்
கொண்டார்.

முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதற்கான வழிவகைகள்
தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு, முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் தீர்க்கும் வகையில் தொடர்புடைய திணைக்களங்களையும் அழைத்து சீரான
கால இடைவெளிகளில் கலந்துரையாடுவது.

NO COMMENTS

Exit mobile version