Home அமெரிக்கா பிரித்தானியாவில் கொண்டுவரப்படும் புதிய தேசிய சேவை : ரிஷி சுனக் அறிவிப்பு

பிரித்தானியாவில் கொண்டுவரப்படும் புதிய தேசிய சேவை : ரிஷி சுனக் அறிவிப்பு

0

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால், தேசிய சேவை கட்டாயமாக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.

அதன்படி கட்டாய தேசிய சேவையின் கீழ், 18 வயது இளைஞர்கள் ஒரு வருடத்திற்கு இராணுவத்தில் சேர வேண்டும் அல்லது ஆண்டுக்கு 25 நாட்கள் பொலிஸ் அல்லது தேசிய சுகாதார சேவை (NHS) போன்ற சமூக அமைப்புகளில் தன்னார்வலர்களாக ஆக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக பிரித்தானிய அரசு ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியன் பௌண்ட்ஸ் (Pounds) செலவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் இணைவோருக்கு 12 மாத முழு நேர இராணுவ பணி அல்லது மாதத்தில் ஒரு வார இறுதி நாளில் பணியாற்றும் அனுமதி என தெரிவு செய்யும் வாய்ப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு

இதேவேளை இராணுவ சேவைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவரும் சிறைக்கு அனுப்ப வாய்ப்பில்லை என்றும் உள்விவகார செயலர் James Cleverly தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவ சேவையில் இணையும் இளைஞர்களுக்கு ஊதியம் மற்றும் இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்புகள் அளிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனிடையே பிரித்தானியாவில் ஜூலை 4-ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version