Home இலங்கை அரசியல் போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு புனர்வாழ்வு – கிளிநொச்சியில் அமைச்சர் உறுதி

போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு புனர்வாழ்வு – கிளிநொச்சியில் அமைச்சர் உறுதி

0

போதைக்கு அடிமையான இளைஞர்களை நீதிமன்றம் அனுப்பாமல் அவர்களுக்கு பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு புனர்வாழ்வு அளிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில்
ஈடுபட்ட அமைச்சர் அங்குள்ள மக்களோடு கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உங்களுக்கு நிறைய பிரச்சனை உள்ளது. போதைப்பொருளுக்கு தீர்வு காண பொலிஸ்
குழுக்களை நியமிப்போம். அதற்கான சுற்றுநிருபம் வந்துள்ளது. சுற்றிவளைப்பு செய்ய
வேண்டுமாக இருந்தாலும் செய்வோம்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள்

யாரும் பயப்பட வேண்டியதில்லை. நல்லதொரு பாதுகாப்பான நாட்டுக்காகவே ஒரு வருடத்திற்கு
முன்பு ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் கடமை எமக்குள்ளது எனவும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம் எனவும் அங்கு கூடியிருந்த மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version