Home இலங்கை அரசியல் யாழ் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

யாழ் தேர்தல் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

0

யாழில் நாம் தாக்கல் செய்த பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் இன்று(20.03.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,

“ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியை பொறுத்தவரையில் நாங்கள் யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களை தவிர ஏனைய அனைத்து இடங்களுக்குமான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.

இதுவரை பரிசீலனை செய்யப்பட்ட 9 சபைகளில் பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய இரண்டு இடங்களை தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் நாங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.

பிறப்பு சான்றிதழின் பிரதி உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லை என கூறி அவர்கள் வேட்புமனுக்களை நிராகரித்துள்ளனர். ஆனால் நாங்கள் கொடுத்த பிரதியில் உறுதிப்படுத்தல் தெளிவாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலதிக தகவல் – தீபன்

NO COMMENTS

Exit mobile version