Home இலங்கை அரசியல் யாழில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு : சுமந்திரன் விளக்கம்

யாழில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு : சுமந்திரன் விளக்கம்

0

யாழில் (Jaffna) வேட்புமனுக்கள் வழக்கத்திற்கு மாறாக நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தற்போது தனக்கு எதுவும் கூற முடியாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை பரிசீலனை செய்யும் நடவடிக்கைகள் நேற்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன.

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ நான் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில், என்னால் இன்னொரு கட்சி தொடர்பில் நீதிமன்றத்தை நாட முடியாது.

இருப்பினும், இது தொடர்பில் கட்சியின் தலைமைகள் நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிமன்று உரிய நடவடிக்கைகளை எடுக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/c_7s92wwTnk

NO COMMENTS

Exit mobile version