Courtesy: Sivaa Mayuri
இலங்கையில் 2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் 690 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் உறுதி செய்துள்ளது.
எனினும், முரண்பாடுகள் காரணமாக 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் மாவட்டங்கள்
அதேவேளை, 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் மொத்தம் 764 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் பணி, இன்றுடன் (11) நண்பகலுடன் நிறைவடைந்தது.
மேலும், 2024ஆம் ஆண்டின் இலங்கையின் பொதுத்தேர்தல் நவம்பர் 14ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது.