Home இலங்கை சமூகம் முன்னாள் அரசியல் கைதிக்கு பிணை வழங்கப்பட்டும் தொடர் சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

முன்னாள் அரசியல் கைதிக்கு பிணை வழங்கப்பட்டும் தொடர் சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

0

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத்
தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தனுக்கு பிணை வழங்கப்பட்டும் தற்போது தொடர்ச்சியாக சிறையில் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த
யூலை மாதம் (07) பிணை வழக்கப்பட்டும் தற்போது தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்றார்.

2024 மார்ச் மாதம் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் முகநூலில்
பதிவுகள் இட்டதாகக் கூறி பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முகநூல்
பதிவு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும்
மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

குற்றச்சாட்டு

தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கடந்த
யூலை மாதம் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என செய்திகள்
வெளியாகியிருந்தது.

ஆனால் பிணை வழங்கப்பட்ட அன்றையதினமே வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணை
இடம்பெற்ற நிலையில் (25.07.2025) அன்று வேறு வழக்கு திகதியிடப்பட்டு அந்த வழக்கு (05.08.2025) திகதி
இடம்பெற்ற நிலையில் மீண்டும் சிறையில் இருந்து விடுவிக்கப்படாமல் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அரசியல் தலைவர்கள் அல்லது அரசியல் தலைமைகள்
கவனத்தில் கொண்டு விடுதலை செய்ய முன்வர வேண்டும் என உறவினர்கள்
தெரிவித்துள்ளார்கள்.

NO COMMENTS

Exit mobile version