Home இலங்கை சமூகம் சிங்கள தமிழ் புத்தாண்டை உறவினர்களுடன் கொண்டாடிய கைதிகள்

சிங்கள தமிழ் புத்தாண்டை உறவினர்களுடன் கொண்டாடிய கைதிகள்

0

சிங்கள தமிழ் புத்தாண்டையொட்டி நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள ‘open visit’ எனும் திட்டத்தின் ஊடாக சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கைதிகளை அவர்களின் உறவினர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இச் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுடன்
புத்தாண்டைக் கொண்டாட பெருமளவிலான சிறைக் கைதிகளின் உறவினர்கள் வருகை
தந்திருந்தனர்.

இதன்போது, சிறைச்சாலைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சிறைச்சாலை அதிகாரிகள்

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் சிறைச்சாலையின்
கைதிகளைப் பார்வையிடும் இணையதளங்களின் செயற்பாடுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், சிறைச்சாலை
அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

NO COMMENTS

Exit mobile version