முதுகெலும்பிருந்தால் அரசியல் கைதிகளின் விடுதலையின் பின்னர் அவர்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சிறைசாலைகளிலுள்ள அரசியல் கைதிகளை பார்ப்பதற்காக சென்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் கைதிகள் சிறையில் உள்ளார்கள்.
இவர்களின் விடுதலை பற்றி தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருக்கின்றோம், ஆனால் இந்த அரசாங்கம் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்காக பொய்யான வாக்குறுதிகளுடன் பல அரசியல் தோழர்கள் இந்த அரசியல் களத்தில் குதித்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
