Home இலங்கை குற்றம் இந்திய கடற்றொழிலாளர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இந்திய கடற்றொழிலாளர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நான்கு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்று(1) ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல்

குறித்த கடற்றொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரண்டு தடவைகள் விளக்கமறியல் உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது தடவையாகவும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் (11) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்
உத்தரவிட்டார்.

NO COMMENTS

Exit mobile version