Home இலங்கை சமூகம் யாழில் முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

யாழில் முன்னெடுக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

0

செஞ்சோலை படுகொலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண (Jaffna)  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (14) பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

விமானப்படை

இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு பல்கலைக்கழக மாணவர்களால்
சுடரேற்றி , மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நினைவேந்தலில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு (Mullaitivu) – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்பட 61 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/remembrance-day-students-killed-insencholai-jaffna-1723653282

NO COMMENTS

Exit mobile version