Home இலங்கை அரசியல் கிளிநொச்சியில் வேட்பாளர்களின் விளம்பரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார்

கிளிநொச்சியில் வேட்பாளர்களின் விளம்பரங்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார்

0

கிளிநொச்சியில்
தருமபுரம் பகுதியில் வேட்பாளர்களின் விளம்பரங்களுக்காக வைக்கப்பட்டிருந்த
பதாதைகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பிரசார நடவடிக்கைகள்
நேற்றுமுன்தினம் (18.09.2024) நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. 

இதனையடுத்தே, வேட்பாளர்களின் விளம்பரங்களை அகற்றும் நடவடிக்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசார அலுவலகங்கள்

இதேவேளை, வாக்காளர் மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரசார அலுவலகங்களை அகற்றுமாறும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/removal-of-candidates-advertisements-kilinochchi-1726780962

NO COMMENTS

Exit mobile version