Home இலங்கை சமூகம் தளர்த்தப்படும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தடை

தளர்த்தப்படும் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான தடை

0

 வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அடுத்த ஆண்டு முதல் தடை விதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தேசிய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கை இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பல்

கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் ஒரு வருட காலத்திற்கு இலங்கைக்கு வர தடை விதிக்கப்பட்டது.

காரணம், 2022ல் சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா எதிர்ப்பு வெளியிட்டது.

கடல் வளங்கள்

எவ்வாறாயினும், ஏனைய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை இலங்கைக்கு பதிலாக மாற்றக்கூடாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயன்படுத்தப்படாத கடல் வளங்கள் இருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்வது அவசியமானது என்றும் தெரிவித்த அமைச்சர், அது வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version