Home இலங்கை அரசியல் சரத் ​​பொன்சேகாவை வெளியேற்ற தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தியினர்

சரத் ​​பொன்சேகாவை வெளியேற்ற தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தியினர்

0

பீல்ட் மார்ஷல் சரத் ​​பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரத் பொன்சேகா கட்சியை விட்டு விரைவில் வெளியேறவுள்ளார், எனவே அவரை முதலில் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையை விமர்சித்த சரத் பொன்சேகாவை வெளியேற்றும் முழு அதிகாரமும் கட்சிக்கு இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி

ஆனால், அவர் கட்சியை விட்டு விலகுவதாக இருந்தால், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அக்கட்சியின் வேறு சில தலைவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளாதாக கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஒழுக்காற்று நடவடிக்கை

குறிப்பாக ‘சிலர் கசினோ சூதாட்டத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குகிறார்கள்’ என்று குற்றம் சுமத்தி இருந்தார்.

இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் கட்சியின் ஒழுக்க விதிகளை சரத் பொன்சேகா மீறி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களில்  கட்சியின் செயற்குழு, கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஒன்றுகூடவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version