Home இலங்கை சமூகம் 225 எம்.பிக்களுக்கும் வழங்கப்படவுள்ள புதிய துப்பாக்கிகள்

225 எம்.பிக்களுக்கும் வழங்கப்படவுள்ள புதிய துப்பாக்கிகள்

0

இருநூற்றி இருபத்தைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில், கைத்துப்பாக்கிகளுக்கு மேலதிகமாக புதிய ரிப்பீட்டர் துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இருநூற்றி இருபத்தைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரிப்பீட்டர் துப்பாக்கிகளை வழங்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளது.

ஐந்து எம்.பிக்கள் விண்ணப்பம்

இதனால் நேற்று (13ம் தேதி) வரை சுமார் ஐந்து எம்பிக்கள் ரிப்பீட்டர் துப்பாக்கிகளை பெற விண்ணப்பித்துள்ளனர்.

பழமையான சீன கைத்துப்பாக்கிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வெளியிடப்பட்ட சீனத் தயாரிப்பான கைத்துப்பாக்கிகள் பழையவை என்றும் சில கைத்துப்பாக்கிகள் செயல்படாத நிலையில் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், எம்.பிக்கள் தங்களது உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க புதிய ரிப்பீட்டர் ஆயுதங்களை பெறலாம் எனவும், பணம் செலுத்தி உரிம கட்டணத்தின் கீழ் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.youtube.com/embed/SESVEZLiaC8

NO COMMENTS

Exit mobile version