எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டும் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி(Tissa Kuttiarachchi) தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவுக்கு இன்னொரு ஜனாதிபதியின் புதல்வரான சஜித் பிரேமதாசவுடன்(sajith premadasa) மட்டுமே போட்டி இருப்பதாக அவர் கூறினார்.
பொருத்தமான வேட்பாளர் நாமல் ராஜபக்ச
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச முகாமில் ஒற்றை நாட்டை உருவாக்கக்கூடிய பொருத்தமான வேட்பாளர் நாமல் ராஜபக்ச. அமைச்சர்கள் கட்சியை விட்டு வெளியேறினாலும் கட்சிக்காரர்கள் விலகவில்லை. கிராம தலைவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு தோல்வி நிச்சயம்
தனது இரத்தம் உள்ள மகனுக்கு வாக்களிக்குமாறு மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) கேட்க மாட்டார். இந்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நிச்சயம் தோல்வியடைவார் என அவர் மேலும் தெரிவித்தார்.