ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு இன்று(12)
திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
முதலில் நிமலராஜனை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்
பின்னர், அவரது படுகொலை தொடர்பான விரிவான அறிக்கை பொதுமக்கள் முன்
வெளியிடப்பட்டது.
கொலை வழக்கு
உயிரிழந்த நிமலராஜனின் கொலை வழக்கு, கடந்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட
ஆண்டுகளாக நீதி இன்றி நிலைத்து வருகின்றது.
இதனால் ஊடக சுதந்திரத்திற்கும்
மனித உரிமை நிலைப்பாடுகளுக்கும் பெரும் கேள்விக்குறியாக காணப்படுகிறது.
நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள்
மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வை வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் திருகோணமலை மாவட்டக்குழு ஏற்பாடு
செய்திருந்தது.
