Home முக்கியச் செய்திகள் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடால்

தமிழீழ விடுதலை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடால்

0

தமிழீழ விடுதலை இயக்கத்தின்
மாவட்ட ரீதியான பிரதிநிதித்துவத்தினை நிலை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (02) திருகோணமலை (Trincomalee) கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில் கட்சியின் தலைமைக் குழு
உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக்கிளைச் செயலாளர்கள் மற்றும் துணைச்
செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல்

இந்தநிலையில், கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட செல்வம்
அடைக்கலநாதன் (Selvam Adhikalanathan), திருகோணமலை மற்றும் அம்பாறை (Amparai) ஆகிய மாவட்டங்களில் தமிழர்
பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள ஒன்றித்து செயற்படுவதற்கு தயாராக
இருப்பதாகவும் அதற்காக எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு தயாராக
இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வரப்போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் இருப்பை நிலை நிறுத்துவதற்கு
அனைவரும் ஒற்றுமையாக ஒரு அணையில் போட்டியிடுவதற்கு முன்வர வேண்டும் என தங்களது
கட்சி ஒன்றித்த தீர்மானத்தினை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுச்சபையின் தீர்மானம்

சின்னம் தொடர்பில் தேர்தல் திணைக்களத்தின் அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும்
அதற்கான அனுமதி கிறைக்கப்பெற்றதும் அது தொடர்பிலும் அறிவிக்கப்படும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுச்சபையின் தீர்மானத்திற்கு அமைவாக இணைந்த வட கிழக்கில் இருப்பை நிலை
நாட்டுவதற்கு சங்கு சின்னத்தினை பொதுச் சின்னமாக கருதி அனைவரும் ஒன்றித்து
போட்டியிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.

NO COMMENTS

Exit mobile version