Home இலங்கை அரசியல் அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது பிமல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த நடவடிக்கை

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக ஸ்வஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அது குறித்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த விடயத்தை விசாரணை செய்து இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.    

 

NO COMMENTS

Exit mobile version