Home இலங்கை சமூகம் வருவதை மட்டுப்படுத்துங்கள்! ரணிலின் வைத்தியர் சற்றுமுன் விடுத்த எச்சரிக்கை

வருவதை மட்டுப்படுத்துங்கள்! ரணிலின் வைத்தியர் சற்றுமுன் விடுத்த எச்சரிக்கை

0

கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட வருகை தருபவர்களிடம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரைப் பார்வையிடுவதை அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார்.

உடல்நலத்திற்கு ஆபத்து

அத்துடன், முன்னாள் ஜனாதிபதியின் நலம் குறித்து விசாரிக்க தற்போது பலர் வருவதால், அது அவருடைய ஓய்வை பாதிப்பதுடன் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  

முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவரது இரத்தத்திலும் பிற உடல் அறிகுறிகளிலும் மாற்றங்கள் காணப்படுவதாகவும் வைத்தியர் பெல்லன்ன தெரிவித்திருந்தார்.

அத்துடன், அவர் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதுடன் நீர்ச்சத்து குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருகிறார். பல சிறப்பு மருத்துவக் குழுக்கள் அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை  

நீர்ச்சத்து குறைபாடு சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், அது சிறுநீரகங்கள், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளைப் பாதிக்கும் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் உடல்நிலை குறித்து விசாரிக்க, அரசியல்வாதிகள் பலர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையிலே ரணில் விக்ரமசிங்கவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் இவ்வாறான ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version