Home இலங்கை அரசியல் மூடி மறைக்கப்படும் அநுர அரசாங்கத்தின் ஊழல் குற்றங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

மூடி மறைக்கப்படும் அநுர அரசாங்கத்தின் ஊழல் குற்றங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

0

தற்போதைய அரசாங்கம் எதிர் தரப்பினர் என்று வரும் போது ஊழல் குறித்த வழக்குகளை விசாரணைக்குட்படுத்துவதாகவும் ஆனால் தாம் என்று வரும் போது அவற்றை மூடி மறைப்பதாகவும் வரலாற்று ரீதியில் ஆய்வு பணிகளை முன்னெடுக்கும் காதர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் ஐபிசி தமிழின் அக்கினி பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய அரசாங்கத்தில் பாதுகாப்பு துறையில் இருக்கும் முக்கிய உயர் அதிகாரியின் மனைவி அரசாங்க வாகனத்தை சொந்த பாவனைக்காக உபயோகித்த போது அது காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்பின்பு, அது தொடர்பிலான வழக்கு கிடப்பில் போட்டு மூடி மறைக்கப்பட்டது.

அத்தோடு, இன்று பாதுகாப்பு அமைச்சராக இருப்பவரே ஒரு காலத்தில் இனவாத கருத்துக்களை வெளியிட்டவர்தான், இவ்வாறு தங்கள் பக்கம் உள்ள விடயங்கள் மூடி மறைக்கபபுடுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், செம்மணி விவகாரம், தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு, தற்போதைய அரசாங்கத்தின் கடந்த காலம் மற்றும் நடப்பு கால அரசியல் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய அக்கினி பார்வை நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/_WzIIblUjG8

NO COMMENTS

Exit mobile version