Home இலங்கை அரசியல் தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்

தலைவர் பிரபாகரன் இணைத்த கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்

0

தலைவர் பிரபாகரன் இணைத்த தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து ஜனநாயக தமிழ்
தேசிய கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில் தமிழ் மக்கள்
தமது ஆதரவை வழங்க வேண்டும் என ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர்
என்.பி.சிறீந்தரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (20)  யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் அரசியல்
எதிர்காலத்திற்காக ஜனநாயக வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்.

 நாடாளுமன்ற தேர்தல் 

துரதிஸ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி தானாக
வெளியேறு தனி வழியில் செல்வதாக தரிவித்த நிலையில் ஏனைய பங்காளிகள்
ஒனீறிணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கினார்கள்.

தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் கடந்த நாடாளுமன்ற
தேர்தலில் சுயேட்சைக் குழுக்களாக களமிறங்கிய பத்துக்கு மேற்பட்ட சுயோட்சைக்
குழுக்கள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தமது இருப்புக்களை தக்க வைக்கும்
தேர்தலாக பார்க்க வேண்டியது காலத்தின் தேவை.

கடந்த தேர்தல் 

தேசிய மக்கள் சக்தியின் மாய வித்தையை நம்பி கடந்த தேர்தலில் தமிழ் மக்கள்
வாக்களித்து எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

தமிழ் தேசிய மக்கள் சக்தியை இனியும் நம்புவது எங்கள் தலையில் நாங்களே மண்ணை
வாரிப் போடுவதாக பார்க்கிறேன்.

ஆகவே, தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை தமிழ் தேசியம் சார்ந்த
கட்சிகளு க்கு வழங்குவதன் மூலம் எமது எஞ்சிய இருப்புக்களையாவது தப்ப வைக்க
முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version