நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சரியாக பதிவேற்றி முடிக்கும்வரை நாடாளுமன்ற இணையதளத்தை தற்காலிகமாக முடக்கி வைக்குமாறு நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார(Harshana Nanayakkara) சபையில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(17.12.2024) கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
கல்வி தகைமை
கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகைமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் அரசியல் பரப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.