Home இலங்கை அரசியல் பதுளை வயிறு என அழைத்தவர் மீது நடவடிக்கை வேண்டும்: சாமர கோரிக்கை

பதுளை வயிறு என அழைத்தவர் மீது நடவடிக்கை வேண்டும்: சாமர கோரிக்கை

0

தன்னை ‘பதுள்ள படா’ (பதுளை வயிறு) என்று குறிப்பிட்ட கோப் குழு உறுப்பினர்
மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்
தசநாயக்க இன்று சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற கோப் குழு கூட்டத்தின் போது, உறுப்பினர் ஓருவர், தன்னை
‘பதுள்ளை படா’ என்று குறிப்பிட்டதாக, சாமர சம்பத் தசநாயக்க,
சுட்டிக்காட்டியுள்ளார்.

பதுளை மாவட்டத்தில் பெரிய வயிறு கொண்ட வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும்
இல்லை.

சமந்த வித்யாரத்ன

அத்துடன், அமைச்சர் சமந்த வித்யாரத்ன உட்பட பதுளையில் உள்ள
மற்றவர்களுக்கு இது மிகவும் மோசமான வயிறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
கூறியுள்ளார்.

எனவே, கோப் உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும், அத்துடன் கூட்டங்களின்
போது, ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் சாமர சம்பத்
தசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version