Home இலங்கை சமூகம் யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்: காவல்துறையினர் விசாரணை

யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்: காவல்துறையினர் விசாரணை

0

யாழ்ப்பாணம் (Jaffna) – உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார்
சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள்

இந்தநிலையில், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில்,
காணி உரிமையாளரால் சுன்னாகம் காவல்துறையினருக்கு  தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுன்னாகம் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்.

Source: https://ibctamil.com/article/rescue-of-a-burnt-motorcycle-in-jaffna-1719474477

NO COMMENTS

Exit mobile version