Home இலங்கை சமூகம் பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அன்னதானம் வழங்கி வைப்பு

பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அன்னதானம் வழங்கி வைப்பு

0

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட மக்கள் சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் பொசன் அன்னதானம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் மரவள்ளிக்கிழங்கு தன்சல் வழங்கப்பட்ட நிலையில் தமிழ், சிங்கள
மக்கள் என பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.

ஹட்டன் 

பொசன் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு ஹட்டன் நகரில் கொட்டும் மழையிலும் ஐஸ்கிரீம் மற்றும் பழச்சாறு அன்னதானம் இடம்பெற்றுள்ளது.

இந்த அன்னதானம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மக்கள் வங்கிக்கு எதிர்ப்பக்கத்தில் நடைபெற்றுள்ளது.

மன்னார் 

மன்னார் (Mannar) மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் மன்னார் பொலிஸ்
நிலையம் ஏற்பாடு செய்த பொசன் பாண் அன்னதானம் மற்றும் தாக சாந்தி வழங்கும்
நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (21.06.2024) நடைபெற்றுள்ளது.

தாக சாந்தி

இந்த நிகழ்வை மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
எல்.வை.எஸ்.ஏ.சந்திரபால வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத், மன்னார் பொலிஸ் நிலைய தலைமையக
பொறுப்பதிகாரி பிரசாந் ஜெயதிலக்க மற்றும் பொலிஸார் கலந்து கொண்டனர். 

நுவரெலியா

மேலும், பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நுவரெலியா பிரதான நகரில் ஐஸ்கிரீம் அன்னதானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் ஏராளமான பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

நுவரெலியாவில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் பொது மக்கள் நீண்ட
வரிசையில் நின்று ஐஸ்கிரீம் அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டனர்

குறிப்பாக நுவரெலியாவில் பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகமான
இடங்களில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது .

செய்தி – திவா

புத்தளம் 

புத்தளம் தில்லையடி பகுதியில் இன்று இளைஞர்களினால் ஐஸ் கிரீம் தானம்
வழங்கப்பட்டன.

இதன்போது பெருந்திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இதில் கலந்துக்கொண்டுள்ளனர்.

செய்தி – அசார்

NO COMMENTS

Exit mobile version