Home இலங்கை குற்றம் யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு

யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – கோப்பாய் இராச பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் நேற்று (22.06.2024)
இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், பொலிஸார் சம்பவ
இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்

அத்துடன், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளின் இலக்கத்
தகடு மற்றும் கோடரி ஆகிய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக
கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/rescue-of-burnt-motorcycle-in-jaffna-1719125601

NO COMMENTS

Exit mobile version