Home முக்கியச் செய்திகள் அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு

0

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் தீர்வுகளை வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தரப்பினருக்கு மாத்திரம் தீர்வுகளை வழங்குவதன் மூலம் மேலும் பல பிரச்சினைகள் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச அதிகாரிகளின் சம்பளத்தை 10000 ரூபாவினால் சிறிலங்கா அதிபர் உயர்த்தியதாகவும், சம்பளத்தை மேலும் உயர்த்த வேண்டும் என தெரிவித்த அமைச்சர், அதற்கு இது சரியான தருணம் அல்ல என்று கூறியுள்ளார்.

ஆட்சேர்ப்பு

மேலும், அவர் தெரிவிக்கையில், “2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும் போது, ​​இலங்கையில் அரச அதிகாரிகளின் எண்ணிக்கை 02% இற்கும் கீழ் குறைந்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரச துறையில் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை.

புதிதாக பணியமர்த்தப்படுவதை விட, தற்போதுள்ள ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டது.

எவ்வாறாயினும், அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது” என்றார்.

 

NO COMMENTS

Exit mobile version