அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதத்தில் இன்று(3) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அஸ்வெசும பயனாளிகளுக்கு உதவிகளை தொடர்ந்து வழங்க அமைச்சரவை நேற்று தீர்மானித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம்
இதன்படி, 400,000 பேருக்கான அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், இந்த திட்டத்தை எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சிக்கலில் இருக்கும் 400,000 பேருக்கு மேலும் ஒரு வருடத்திற்கு நலன்புரி உதவி வழங்கப்படும் என குறிப்பிட்டார்.