நாட்டில் 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இதற்காக சில மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நகர்த்தல் பத்திரம் ஊடாக விடயங்களை முன்வைக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் மருந்துகளின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
HMPV வைரஸ்
இதேவேளை, தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து இலங்கையில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் (University of Sri Jayewardenepura) நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே (Neelika Malavige) தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.