Home இலங்கை அரசியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சிறீதரன் தொடர்பில் வெளியான தகவல்

0

நாளை சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசின் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று சென்னை புறப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை எப்படியாவது தடுத்து நிறுத்த கடுமையாக முயற்சி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இடம்பெறவுள்ள அயலக தமிழர் தின விழாவின் சிறப்பு விருந்தினராக சிவஞானம் சிறீதரன கலந்து கொள்ளவுள்ளார். 

இந்நிலையில், குற்றபுலனாய்வு மூலம் சிறீதரன் மீது குற்றவியல் வழக்கு குற்றச்சாட்டு இருக்கிறது என போலி முறைப்பாடு ஒன்றை செய்து. குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு சிறீதரனுக்கு பயணத்தை தடை செய்யுமாறு சிஐடி மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதற்கமைய, உங்களுடைய பழைய கடவுச்சீட்டில் ஒரு பிழை இருக்கிறது. அதனால் நீங்கள் பயணிக்க முடியாது என்று தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கிறார்கள்.

திடீர் நடவடிக்கை 

தற்போதைய புதிய கடவுச்சீட்டில் இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்கிறார் சிறீதரன் எம்பி, இந்நிலையில், வராத பயணத்தடை தற்போது எப்படி திடீர் என்று வந்தது? 

நாளை மறுதினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதம விருந்தினராக பங்குபற்றும் நிகழ்வில் சிறீதரன், சிறப்பு விருந்தினராக பங்குபற்றுகிறார்.

சிறீதரனின் இந்த முன்னகர்வுகளை பொறுக்க முடியாத, மனநிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு தரப்பு தான் இந்த தடை ஏற்படுத்தும் வேலையை மேற்கொண்டதாக விமான நிலையத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் சிலர் பேசிக்கொண்டார்கள். சந்தேகம் இருந்தால் சிறீதரனுடன் பயணித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

உள்ளக பிரச்சினைகள்

இயலாமையின் உச்சத்தில் கீழ்த்தரமாக என்ன எல்லாம் செய்கிறார்கள். இந்த மோசமான செயல் அந்த தரப்பை அடையாளம் தெரியாமல் அழிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை, இத்திடீர் நடவடிக்கையின் பின்னணியில் தற்போதைய கட்சியின் உள்ளக பிரச்சினைகள் இருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது. 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை தடுத்து நிறுத்துவதற்கு சில கடப்பாடுகள் இருக்கின்றன. இருப்பினும் அவை எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version