ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) செயற்படுத்துவதை
வலுப்படுத்த கொழும்பு 7 இல் நான்கு புதிய மேல் நீதிமன்ற வளாகங்களை
நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
அமைச்சரவை ஆவணத்தின் படி, ஊழல் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துவதற்கான
நீதித்துறை திறனை விரிவுபடுத்துவது உள்ளிட்ட திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை
செயற்படுத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் பணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் நான்கு
அரசுக்குச் சொந்தமான கட்டடங்களை மேல் நீதிமன்ற வளாகங்களாக உடனடியாகப்
பயன்படுத்த நீதி அமைச்சகத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில் இந்த மாற்றத்திற்காக அடையாளம் காணப்பட்ட கட்டடங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
எண். பி 88, கிரிகோரி சாலை, கொழும்பு 07
எண். சி 76, பௌத்தலோக மாவத்தை, கொழும்பு 07
எண். பி 108, விஜேராம சாலை, கொழும்பு 07( இது முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச வசித்து வந்து இல்லமாகும்)
எண். பி 12, ஸ்டான்மோர் கிரசென்ட், கொழும்பு 07
