Home முக்கியச் செய்திகள் தேங்காய் தட்டுப்பாடு எதிரொலி : அதிகரிக்கப்போகும் சிற்றுண்டிச்சாலை உணவு விலைகள்

தேங்காய் தட்டுப்பாடு எதிரொலி : அதிகரிக்கப்போகும் சிற்றுண்டிச்சாலை உணவு விலைகள்

0

அரிசி, முட்டை, உப்பு, தேங்காய் ஆகியவற்றின் விலை உயர்வினால் சிற்றுண்டிச்சாலை உணவுப் பொருட்களின் விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலில் செய்யப்பட்ட குழம்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

கோழி இறைச்சியின் விலை

கோழி இறைச்சியின் விலை கிலோ ரூ.1,200ல் இருந்து ரூ.1,280 ஆக அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.

அதன்படி,தேங்காய் விலை உயர்வால் அப்பம் மற்றும் மதிய உணவுப் பொதிகள் தயாரித்தல் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Source: https://ibctamil.com/article/restaurant-food-prices-set-to-rise-1733753113?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version