Home இலங்கை அரசியல் அநுர ஆட்சிக்கு அங்கீகாரம்: தடைப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பித்த ஜப்பான்

அநுர ஆட்சிக்கு அங்கீகாரம்: தடைப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் ஆரம்பித்த ஜப்பான்

0

இலங்கையில் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை
ஜப்பான் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இந்த முடிவு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிர்வாகத்திற்கும் அதன் பரந்த
ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஒப்புதலாக
கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி

முன்னதாக, இலங்கையில் தவறான முகாமைத்துவம், வெளிப்படைத்தன்மை இல்லாமை மற்றும்
நிறுவனமயமாக்கப்பட்ட ஊழல்கள் காரணமாக, ஜப்பான் அபிவிருத்தி திட்டங்களில்
இருந்து விலகியிருந்தது.

இதன்படி,கொழும்பில் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு, பண்டாரநாயக்க
சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் பல்வேறு நீர், சுகாதாரம்
மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டன.

எனினும், கண்டி நகர நீர் முகாமைத்திட்டம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான
நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் உட்பட ஜப்பானிய அரசாங்கத்தால்
நிதியளிக்கப்பட்ட 11 தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக, ஜப்பானிய
தூதர் அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version