ஓய்வுபெற்ற விமானப்படைச் சிப்பாய் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில்
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி நபர் அநுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து
நேற்று முன்தினம்(9) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்பு
இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து
வந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த ஓய்வுபெற்ற விமானப்படைச் சிப்பாய்க்கும் உறவினர் ஒருவருக்கும்
இடையில் நீண்ட காலமாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது என்று அவரது மனைவி, பொலிஸ்
விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
அவர் உயிரிழந்து நீண்ட நாட்கள் ஆகியுள்ளதால் சடலம் உருக்குலைந்த நிலையில்
காணப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
