Home இலங்கை சமூகம் வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

0

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சக செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஓய்வு பெறும் வயது

இதற்கமைய, தற்போது 62ஆக காணப்படும் வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63ஆக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version