Home சினிமா உலகளவில் இதுவரை ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

உலகளவில் இதுவரை ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

ரெட்ரோ

கங்குவா படத்தின் தோல்விக்கு பின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்ஷன் காதல் கதையில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

வசூல் 

எதிர்பார்ப்புக்குரிய படமாக வெளிவந்த ரெட்ரோ சற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் முதல் நான்கு நாட்களிலும் வசூலில் பட்டைய கிளப்பியது.

ஆனால், கடந்த 5 நாட்களாக வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் 9 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரெட்ரோ உலகளவில் 9 நாட்களில் ரூ. 91 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/retro-movie-9-days-box-office-collection-1746845524

NO COMMENTS

Exit mobile version